இயக்குனர் S U அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன்-பாகம் 2. இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதுவரை உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து நடிகர் விக்ரம் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லோரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினை உள்ளது. அதுபோல் படம் ரிலீஸுக்கு முன்னாடி படம் பார்த்தவர்கள் இந்த படம் நல்லா இருக்கு. நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்று சொன்னார்கள். ஆனா படம் ரிலீஸ் அப்போ நிறைய சட்டப் பிரச்சினைகள் வந்ததால், நான்கு வாரங்கள் படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது என்று தீர்ப்பு வந்தது.
எனக்கு இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோருமே அதற்கான முயற்சிகளை செய்தும் கூட. ரொம்ப நாட்களுக்கு அப்புறம் எனது ரசிகர்களுக்கு ரியலான மாஸ் படம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு படத்துக்கு முதல் ஷோ கேன்சல் ஆனாலே அந்த படம் அவ்வளவுதான். ஆனால் இந்த படத்துக்கு இரண்டு ஷோ கேன்சல் ஆனது. ஆனால் படம் பார்த்த அனைவருமே படத்தை பாராட்டினார்கள். இந்த படம் பெரிய வெற்றியை நோக்கித்தான் போய்ட்டு இருக்கு இதனை நினைக்கும் போது நன்றி மட்டும் சொல்ல தோன்றுகிறது. நாங்கள் நினைத்தது நடந்துவிட்டது. சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
‘சூர்யா 45’ படத்துடன் மோதும் கார்த்தியின் புதிய படம்….. அதிரடி சரவெடி அப்டேட்!