Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபுவின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்...... அறிவிப்பு குறித்து அவரே கொடுத்த ஹின்ட்!

வெங்கட் பிரபுவின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்…… அறிவிப்பு குறித்து அவரே கொடுத்த ஹின்ட்!

-

வெங்கட் பிரபு தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை நாளை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதாவது ஏ ஜி எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். கதாநாயகி குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தற்போது வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் அப்டேட்டை நாளை காலை 11 மணியளவில் வெளியிட இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அதனால் இந்த அறிவிப்பு தளபதி 68 படம் குறித்து அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ படத்தின் படப்பிடிப்புகளும் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டன. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

அதனால் தற்போது விஜய்யும் தளபதி 68-யில் நடிப்பதற்கு தயாராக உள்ளார்.எனவே வெங்கட் பிரபு விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 நடிக்கும் பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில் வெங்கட் பிரபு கிச்சா சுதீப் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ