Homeசெய்திகள்சினிமாஷாட் பூட் த்ரீ ஓடிடி தளத்தில் ரிலீஸ்

ஷாட் பூட் த்ரீ ஓடிடி தளத்தில் ரிலீஸ்

-

- Advertisement -
பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு விஜயின் நடிப்பில் தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஷாட் பூட் த்ரி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே சினேகா வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் ஷாட் பூட் த்ரி படத்தில் யோகி பாபு, பிரணிதி, கைலாஷ் ஹீட், பூவை யார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தை இயக்கிய அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராஜேஷ் வைத்யா இதற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஷாட் பூட் த்ரீ படம் பிரபல அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ