Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் 'வெப்பம் குளிர் மழை' படத்தின் டிரைலர்!

இன்று வெளியாகும் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் டிரைலர்!

-

வெப்பம் குளிர் மழை படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திரைத் துறையில் பல முன்னணி இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புதுமுக இயக்குனர்கள் களமிறங்கி தங்களின் முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அசத்தி விடுகிறார்கள். இன்று வெளியாகும் 'வெப்பம் குளிர் மழை' படத்தின் டிரைலர்!கடந்த ஆண்டில் வெளியான குட் நைட், ஜோ, போர் தொழில் போன்ற படங்கள் அறிமுகம் இயக்குனர்களால் இயக்கப்பட்டு ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் பஸ்கல் வேதமுத்து என்ற அறிமுக இயக்குனர் வெப்பம் குளிர் மழை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். எஃப்டிஎஃப்எஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார். பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இஸ்மத் பானு கதாநாயகியாக நடித்துள்ளார்.இன்று வெளியாகும் 'வெப்பம் குளிர் மழை' படத்தின் டிரைலர்!

சமீபத்தில் இந்த படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. அதன்படி இந்த படம் எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பையும் தூண்டியது. மேலும் அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலையும் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் எனவும் அந்த ட்ரெய்லரை தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரம்மா வெளியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெப்பம் குளிர் மழை படமானது வருகின்ற மார்ச் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ