இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நிலையில் கடந்தாண்டு சூரி நடிப்பில் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் சூரி உடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதியிலும் இரண்டாம் பாகத்திற்கான லீடு கொடுக்கப்பட்டு படம் முடிக்கப்பட்டது. எனவே இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்றும் சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


