சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் நேற்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக ஹம் என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதும் படத்தின் மற்றொரு எதிர்பார்ப்புக்கு காரணம். அடுத்தது பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியிருந்த இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறைக்கும் பேசியது. முதல் பாதி சுவாரஸ்யமாக சென்றாலும் இரண்டாம் பாதியில் தொய்வுகள் ரசிகர்களை சற்று சலிப்படைய வைக்கிறது. இருக்கணும் ரஜினியின் மாஸ், அனிருத்தின் பிஜிஎம் போன்றவை படத்தை தாங்கி பிடித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 48 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.