Homeசெய்திகள்சினிமாவிரைவில் வெளியாகும் 'வேட்டையன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..... பாடல் பெயர் என்னன்னு தெரியுமா?

விரைவில் வெளியாகும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்….. பாடல் பெயர் என்னன்னு தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.விரைவில் வெளியாகும் 'வேட்டையன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..... பாடல் பெயர் என்னன்னு தெரியுமா? இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படமானது வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. எனவே ரசிகர்கள் பலரும் படத்தை திரையரங்குகளில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.விரைவில் வெளியாகும் 'வேட்டையன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..... பாடல் பெயர் என்னன்னு தெரியுமா? அதன்படி விரைவில் இதன் முதல் பாடல் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் மனசிலாயோ என்பதுதான் வேட்டையன் படத்தின் முதல் பாடலின் பெயர் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மனசிலாயோ என்பது ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகனின் டயலாக். இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் அதே டயலாக்கில் இருக்கும் வேட்டையன் பட முதல் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ