அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் உருவாகி இருக்கின்றன. அதில் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து இப்படம் விலகியது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படம் இந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்கான நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வரும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று (ஜனவரி 16) மாலை 6.40 மணி அளவில் விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதால் அதே ட்ரெய்லரில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.