விடாமுயற்சி திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
அஜித் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் அஜித்தின் 62 ஆவது படமாகும். இதனை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் அஜித் எந்தவித பில்டப்பும் இல்லாமல் நடித்திருந்தார். அதேபோல் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருந்தார். இருப்பினும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெற்ற சவதீகா பாடல் தற்போது வரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்நிலையில் இப்படம் இன்று (மார்ச் 3) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.