Homeசெய்திகள்சினிமாவிரைவில் வருகிறது 'விடாமுயற்சி' டீசர்.... லைக்கா நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் இது தானா?

விரைவில் வருகிறது ‘விடாமுயற்சி’ டீசர்…. லைக்கா நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் இது தானா?

-

- Advertisement -

அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத்தின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவியிலும் இந்த படம் உருவாகி வருகிறது. விரைவில் வருகிறது 'விடாமுயற்சி' டீசர்.... லைக்கா நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் இது தானா?படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடிக்கின்றனர். மேலும் ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆஜர்பைஜான், ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. இன்னும் பாடல் காட்சி ஒன்றைத் தவிர படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் பரவி வருகின்றன. அதேசமயம் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்தின் அடுத்த படத்திற்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். விடாமுயற்சி திரைப்படம் இன்னும் நிறைவடையாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வராதா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே அப்டேட்டுகள் வெளிவந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வருகிறது 'விடாமுயற்சி' டீசர்.... லைக்கா நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் இது தானா?இந்நிலையில் மகிழ் திருமேனி, விடாமுயற்சி படத்தின் டீசரை தயார் செய்து விட்டதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் லைக்கா நிறுவனம், விடாமுயற்சி டீசரை, தியேட்டரில் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்த திட்டம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் விடாமுயற்சி படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ