Homeசெய்திகள்சினிமாவிதார்த்தின் 'ஆயிரம் பொற்காசுகள்'.......சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியானது!

விதார்த்தின் ‘ஆயிரம் பொற்காசுகள்’…….சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியானது!

-

- Advertisement -

விதார்த்தின் ஆயிரம் பொற்காசுகள் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

நடிகர் விதார்த் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் லாந்தர், சமரன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் நடிகர் விதார்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான குய்கோ, இறுகப்பற்று உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி டெவில் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.விதார்த்தின் 'ஆயிரம் பொற்காசுகள்'.......சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியானது! இதற்கிடையில் நடிகர் விதார்த், ஆயிரம் பொற்காசுகள் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ரவி முருகையா இயக்கியிருந்தார். இதில் விதாரத்துடன் இணைந்து சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை கே ஆர் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ஜோகன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது. விதார்த்தின் 'ஆயிரம் பொற்காசுகள்'.......சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியானது! காமெடி நிறைந்த கதைக்களத்தில் வெளியான இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ என்ற மலேசியன் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.

MUST READ