spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிக்கலில் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்'.... மாற்றப்படும் படத்தின் தலைப்பு!

சிக்கலில் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’…. மாற்றப்படும் படத்தின் தலைப்பு!

-

- Advertisement -

சிக்கலில் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்'.... மாற்றப்படும் படத்தின் தலைப்பு!பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்த வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் நடப்பாண்டில் மட்டுமே மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் போன்ற படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹிட்லர், வள்ளி மயில் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இன்னும் சில படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படம் உருவானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சரத்குமார், மேகா ஆகாஷ், தனஞ்செயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோவா, டையூ டாமன் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த 2022 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. ஆனால் பல நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்து வருகிறது இந்த மலை பிடிக்காத மனிதன் திரைப்படம்.சிக்கலில் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்'.... மாற்றப்படும் படத்தின் தலைப்பு!

we-r-hiring

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி மழை பிடிக்காத மனிதன் என்னும் டைட்டிலை பட குழுவினர் மாற்ற உள்ளனராம். படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு இந்த டைட்டில் ஒரு காரணமாக இருக்கலாம் என்று படத்தின் டைட்டிலை ‘சலீம் 2‘ என மாற்றி வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்களாம்.

கடந்த 2014 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் சலீம் திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை போல் சலீம் 2 என இப்படத்தின் டைட்டிலை மாற்றப் போகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை விரைவில் பட குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ