Homeசெய்திகள்சினிமாஇரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்'!

இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’!

-

மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்'!

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக நுழைந்து இருந்தாலும் தற்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் வள்ளி மயில், ஹிட்லர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருவி பட இயக்குனருடன் கைகோர்த்து புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதற்கிடையில் இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்'!இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த படம் திரையிடப்பட்டது. வெளியான நாள் முதலே இயக்குனர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் யாரோ ஐந்து நிமிட காட்சிகளை படத்தில் இணைத்து விட்டதாக சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது. இந்த நிலையில் இப்படம் இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்துள்ளது. அதாவது மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ