விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். அந்த வகையில் கடந்த 25ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிப்பதிலும் ஆர்வம் உடையவர் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ககன மார்கன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை லியோ ஜான் பால் இயக்கியிருக்கிறார். இவர் பீட்சா, அட்டகத்தி, சூது கவ்வும், இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ககன மார்கன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் இந்த படம் ஆனது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.