spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டிராகன்' படக்குழுவினரை பாராட்டிய விஜய்.... அஸ்வத் வெளியிட்ட உருக்கமான பதிவு!

‘டிராகன்’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்…. அஸ்வத் வெளியிட்ட உருக்கமான பதிவு!

-

- Advertisement -

பிரபல நடிகரும் அரசியல்வாதியமான விஜய், டிராகன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.'டிராகன்' படக்குழுவினரை பாராட்டிய விஜய்.... அஸ்வத் வெளியிட்ட உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். சுவாரஸ்யமான திரைக் கதையில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.'டிராகன்' படக்குழுவினரை பாராட்டிய விஜய்.... அஸ்வத் வெளியிட்ட உருக்கமான பதிவு! மேலும் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், டிராகன் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் விஜயை சந்திக்க எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்பதை என்னுடைய மக்கள் அறிவார்கள். நான் விஜயின் தீவிர ரசிகன் என்பது என்னுடைய டீமுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

we-r-hiring

இன்று அவரை சந்தித்தபோது அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தேன். என்னுடன் வந்தவர்கள் நான் ஏதாவது பேசுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் விஜய்யை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அப்போது என்னுடைய டீம் அதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். விஜய் மீது ஏன் இவ்வளவு அன்பு என்று கேட்டார்கள்? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. விஜய் என்னை பார்த்து ‘கிரேட் ரைட்டிங் ப்ரோ’ என்று சொன்னார். இது போதும் எனக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ