விஜய் கனிஷ்காவின் ஹிட் லிஸ்ட்… மே 31 திரையரங்குகளில் ரிலீஸ்…
விஜய் கனிஷ்காவின் ஹிட் லிஸ்ட் திரைப்படம் வரும் நாளை மறுநாள் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
குடும்ப படங்கள் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றவர் விக்ரமன். பல வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரமன், கோலிவுட் சினிமாவில் 90-களில் டாப் இயக்குநராக வலம் வந்தவர் ஆவார். இவரது மகன் விஜய் கனிஷ்கா. இவர் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்கள் சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இயக்கி உள்ளனர். படத்திற்கு ‘ஹிட்லிஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஜய் கனிஷ்கா நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாகவும் நடித்துள்ளார். இது தவிர, ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரன், அனுபமா குமார் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து உள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் விஜய்யை சந்தித்து படக்குழு வாழ்த்துக்களும் பெற்றனர். இந்நிலையில், ஹிட் லிஸ்ட் திரைப்படம் நாளை மறுநாள் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.