spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…

-

- Advertisement -
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மகாராஜா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா மட்டுமன்றி பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என அனைத்திந்திய திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் கலக்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தற்போது வில்லன் வேடங்களிலும் அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இத்திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்தியில் மீண்டும் ஒரு படத்தில் நடித்தார்.

we-r-hiring
மெரி கிறிஸ்துமஸ் என்ற அத்திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் நாயகியாக நடித்திருந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் தான் மகாராஜா. இத்திரைப்படத்தை, குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அம்மு அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முன்னோட்டத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது. இது இணையத்தில் வைரலானது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 14-ம் தேதி மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ