spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்மஸ்'.....5 நாள் வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்மஸ்’…..5 நாள் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்மஸ்'.....5 நாள் வசூல் எவ்வளவு?தற்போது அகில இந்திய அளவில் பிரபல நடிகராக மாறிவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.இந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் நடிகராகவே உருவெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. 2024 பொங்கல் ஸ்பெஷலாக தமிழில் வெளியான 4 படங்களில் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் படமும் ஒன்று.”அந்தாதூன்” என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இப்படத்தையும் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்திருந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாள் இரவின் போது முன்னதாக அறிமுகம் இல்லாத விஜய் சேதுபதியும் கத்ரீனா கைஃபும் சந்திக்க நேர்கிறது. அதைத்தொடர்ந்து நடக்கும் த்ரில்லர் சம்பவங்கள் தான் படத்தின் கதை. மெரி கிறிஸ்மஸ் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்மஸ்'.....5 நாள் வசூல் எவ்வளவு?இருப்பினும் தமிழ்நாட்டில் அயலான், கேப்டன் மில்லர் நேரடி தமிழ்ப் படங்களுடன் வெளியானதால் மிகப்பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்படத்திற்கான வசூல் நிலை சற்று குறைவாகவே இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி இப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலக அளவிலேயே கிட்டத்தட்ட 13 கோடிகளை மட்டும்தான் வசூலித்துள்ளதாம். பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றும் கூட படத்திற்கு எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்பது சற்று வருத்தம் அளிக்கிறது என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ