ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். இதில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் ரேஞ்சில் வெளிவந்த இந்த ட்ரெய்லரைக் கண்டு பிரமித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் கண் மற்றும் தெரிவது போன்ற போஸ்டரை வெளியிட்டு ரெடி என்று கேப்ஷன் இட்டுள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Readyyyyyy pic.twitter.com/SkGLDAWJ8R
— atlee (@Atlee_dir) July 23, 2023
ஏற்கனவே விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களை விட வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் அதிக வசூல் வேட்டை நடத்துகின்றன. அதனால் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.