Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி, மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

விஜய் சேதுபதி, மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

-

தென்னிந்திய திரை உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மிஷ்கின், விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாகவும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் மிஸ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி, அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ