Homeசெய்திகள்சினிமாதலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனாகும் நடிகர் யார்?..... லேட்டஸ்ட் அப்டேட்!

தலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனாகும் நடிகர் யார்?….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அலப்பறையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து ரஜினி தனது 170 வது படத்தை இயக்குனர் டிஜே ஞானவெளி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அதன் பின் தனது 171 வது படத்தை ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. லியோ திரைப்படத்தை முடித்த லோகேஷ் கனகராஜன் தலைவர் 171 படத்திற்காக தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.rajini-and-lokesh.jpg

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவலும் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தலைவர் 171லும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ