விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து இவர் நடித்திருந்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மகாராஜா, VJS51 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கின் இயக்கி வரும் ட்ரெயின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இந்தியில் உருவாகி வரும் மெரி கிறிஸ்மஸ் இன்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீ ராம் ராகவன் இயக்கியுள்ளார். டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இதனை தயாரிக்க பிரிட்டம் இசையமைத்துள்ளார். இப்படம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
#MerryChristmas Trailer out on 20th December 🎄✨#SriramRaghavan @TipsFilmsInd #MatchboxPictures @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani #KewalGarg #KatrinaKaif #SanjayKapoor #VinayPathak #TinnuAnand #RadhikaApte #PratimaKanan #AshwiniKalsekar @SGayathrie #PariSharma… pic.twitter.com/PfTRwOhvpn
— VijaySethupathi (@VijaySethuOffl) December 18, 2023
ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரி கிறிஸ்மஸ் படத்தின் டிரைலர் டிசம்பர் 20 (நாளை) வெளியாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


