- Advertisement -
விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மெரி கிரிஸ்துமஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரையுலகில் மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் ஹீரோ என்ற அந்தஸ்தில் உச்சம் தொட்ட நடிகர் விஜய் சேதுபதி தற்போது வில்லன் வேடங்களிலும் அசத்தி வருகிறார். முதன் முதலாக தமிழில் வில்லன் வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. அடுத்து தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியன.


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் அசத்திய விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தியில் இறுதியாக வெளியான திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். திரைப்படத்தில் கத்ரினா கைஃப் நாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே, சஞ்சய் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்றது.



