Homeசெய்திகள்சினிமாவிழாக்கோலம் பூண்ட விஜயகுமார் வீடு... கோலாகலமாக நடக்கும் பேத்தி திருமணம்...

விழாக்கோலம் பூண்ட விஜயகுமார் வீடு… கோலாகலமாக நடக்கும் பேத்தி திருமணம்…

-

பேத்தி திருமணத்தை முன்னிட்டு பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை பிரபலமான நடிகர் விஜயகுமார். தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வந்த அவர் தற்போது தந்தை, தாத்தா உள்பட குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய், கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி ஆகிய குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரையில் இவர் ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் பதவியை வகித்தவர்.

இவரது மூத்தமகன் அருண்விஜயும், இவரும் இணைந்து பாண்டவர் பூமி , மலாய் மலாய் , மஞ்சா வேலு, குற்றம் 23 மற்றும் ஓ மை டாக் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா, இவர் சினிமாவில் நுழையாமல் மருத்துவராக உள்ளார். கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, கோகுல், தியா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் தியா வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு தான் தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. திலன் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

இதையொட்டி விஜயகுமார் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரது மகள்கள், மகன், பேத்திகள், பேரன்கள் என அவரது வீடே திருவிழா போல காட்சி அளிக்கிறது. புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணம் நடந்த அதே நட்சத்திர விடுதியில் இவர்களின் திருமணம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

MUST READ