spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அப்டேட்!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

விஜய் சேதுபதி தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் பெரும்பாலான படங்கள் வசூல் வேட்டை நடத்துகின்றன.

அந்த வகையில் இவர் சமீபத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக விடுதலை பாகம் 1 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

we-r-hiring

இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
அதே சமயம் அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்குகிறார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ