விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி விடுதலை, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் கோலிவுட்ல விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் ஆகும்.
இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், நட்டி (நடராஜன்) மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ‘மகாராஜா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் செஸ் போர்டின் கருப்பு வெள்ளை நிறங்கள் மற்றும் இரண்டு ராஜா சதுரங்க காயின்கள் காணப்படுகிறது. அதில் கருப்பு நிற காயினில் உச்சியில் கழுகு பறவை இருப்பது போன்றும் அதில் விஜய் சேதுபதியின் முகம் தெரிவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு தலைகீழாக பார்த்தால் அதற்கு எதிராக வெள்ளை நிற சதுரங்க காயினின் உச்சியில் ஓநாய் ஒன்று இருப்பது போன்றும் அனுராக் காஷ்யப் முகம் தெரிவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வித்தியாசமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் கதாநாயகனாகவும், அனுராக் காஷ்யப் இந்த படத்தில் வில்லனாகவும் நடிக்கின்றனர் என்பதை கூறி இருக்கின்றனர்.
மேலும் அசத்தலாக வெளிவந்துள்ள இந்த போஸ்டர் இன் மூலம் இந்த படம் மிகவும் வித்தியாசமாக உருவாகும் என்பது தெரியவந்துள்ளது.