Homeசெய்திகள்சினிமாவிக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'தங்கலான்'..... 4 நாட்களில் இத்தனை கோடியா?

விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘தங்கலான்’….. 4 நாட்களில் இத்தனை கோடியா?

-

இயக்குனர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'தங்கலான்'..... 4 நாட்களில் இத்தனை கோடியா?அதன் பின்னர் இவர் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க வில்லனாக டேனியல் கால்டகிரோன் நடித்திருக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவதை தனது ஸ்டைலில் இயக்கியிருந்தார் பா. ரஞ்சித். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'தங்கலான்'..... 4 நாட்களில் இத்தனை கோடியா? இருப்பினும் ஆரம்பத்தில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்ததால் முதல் நாளிலேயே 26 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அதனை படைத்தது. இந்நிலையில் 4 நாட்களில் உலகம் முழுவதும், இப்படம் 68 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் விரைவில் இப்படம் 100 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ