விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விக்ரம் பிரபு. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தெலுங்கில் அனுஷ்காவுடன் இணைந்து காட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் லவ் மேரேஜ் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து சுஷ்மிதா பட், ரமேஷ் திலக், மீனாட்சி, அருள்தாஸ், முருகானந்தம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் சத்யராஜ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சண்முக பிரியன் இந்த படத்தை இயக்கி இருக்கும் நிலையில் ஷான் ரோல்டன் இதற்கு இசையமைக்கிறார். மதன் கிறிஸ்டோபர் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். குடும்ப பொழுதுபோக்கு பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் 2025 கோடை விடுமுறையில் திரைக்கு வர தயாராகி வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) மாலை 5 மணி அளவில் இந்த படத்தில் இருந்து கல்யாண கலவரம் எனும் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.