Homeசெய்திகள்சினிமாவிக்ரம் பிரபு நடிக்கும் 'சிறை'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’…. முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

விக்ரம் பிரபு நடிக்கும் சிறை திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விக்ரம் பிரபு நடிக்கும் 'சிறை'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் கும்கி, சிகரம் தொடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விக்ரம் பிரபு. இவர் கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘காட்டி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதற்கிடையில் இவர், சிறை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்க ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் இதற்கு கதை எழுதியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இதில் விக்ரம் பிரபு உடன் இணைந்து தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இந்த படமானது ஒரு காவல் அதிகாரிக்கும், கைதிக்கும் இடையிலான பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. விக்ரம் பிரபு நடிக்கும் 'சிறை'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘மன்னிச்சிரு’ எனும் முதல் பாடல் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

we-r-hiring

மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ