விஷால் நடிக்கும் மகுடம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புரட்சி தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷாலின் நடிப்பில் கடைசியாக ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. பல வருடங்கள் கழித்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விஷால், மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் விஷால், ஈட்டி, ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் தனது 35 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி மகுடம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.