spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா9 படங்கள் தோல்விதான்; ஆனால் தற்போது 9 படங்கள் கைவசம் உள்ளன - விஷ்ணு விஷால்

9 படங்கள் தோல்விதான்; ஆனால் தற்போது 9 படங்கள் கைவசம் உள்ளன – விஷ்ணு விஷால்

-

- Advertisement -

ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் பிடித்த காரணத்தால்தான் கட்டா குஸ்தி படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக்கொண்டேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

9 படங்கள் தோல்விதான்; ஆனால் தற்போது 9 படங்கள் கைவசம் உள்ளன - விஷ்ணு விஷால்

கடந்த 2ஆம் தேதி விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குநர் செல்லா அய்யாவு மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

we-r-hiring

அப்போது விழா மேடையில் விஷ்ணு விஷால் பேசியபோது, ‘கட்டா குஸ்தி’ படத்தின் முதல் நாள் வசூலை விட 2 மற்றும் 3 ஆம் நாட்களின் வெற்றி தற்போது 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வருகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்ற நோக்கம் எனக்கு பிடித்த காரணத்தால்தான் இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டேன். நான் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு என் அம்மாவும், அக்காவும் எனக்கு ஆதரவளித்ததில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.

என் அம்மாவும், அக்காவும் எனக்கு ஆதரவளித்ததில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.

ஆண்கள் எல்லாருடைய வாழ்விலும் கண்டிப்பாக ஒரு பெண்ணின் ஆதரவு எப்போதும் இருக்கும். அவ்வாறான ஒரு கதைக்களம் கொண்ட படத்தை தயாரிக்க ஆசைப்பட்டதன் விளைவுதான் “கட்டா குஸ்தி“ திரைப்படம். எந்த எண்ணத்தில் இந்த படத்தை உருவாக்கினோமோ, அதே எண்ணத்தில் மக்களிடம் சென்றடைந்துள்ளது. இப்படத்தின் வழியாக ஒரு மாற்றம் நடந்தால் சந்தோஷம் தானே என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் எஃப்.ஐ.ஆர். படத்தை தொடர்ந்து எனக்கு இது 2-வது வெற்றி என்றும் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும் தெரிவித்தார். உண்மையாகவே எனக்கு ஒன்பது படம் தோல்வியில்தான் முடிந்தது. ஆனால் தற்போது என் கைவசம் 9 திரைப்படங்கள் உள்ளன. இன்னும் நிறைய திரைப்படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

மேலும் இயக்குநர் செல்லா அய்யாவு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பட குழுவினர் அனைவரும் விழா மேடையில் நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.

MUST READ