Homeசெய்திகள்சினிமாவிரைவில் வருகிறது விஷ்ணு விஷாலின் 'முண்டாசுப்பட்டி 2'!

விரைவில் வருகிறது விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி 2’!

-

கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விரைவில் வருகிறது விஷ்ணு விஷாலின் 'முண்டாசுப்பட்டி 2'!இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான ராட்சசன் திரைப்படமும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மூன்றாவது முறையாகவும் இந்த கூட்டணி புதிய படத்திற்காக இணைந்துள்ளது. அதன்படி விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காவது முறையாகவும் விஷ்ணு விஷால், ராம்குமார் காம்போ இணைய இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது. விரைவில் வருகிறது விஷ்ணு விஷாலின் 'முண்டாசுப்பட்டி 2'!அதன்படி மீண்டும் இணைய உள்ள இந்த கூட்டணியிலான படம் முண்டாசுப்பட்டி 2 படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கான முதற்கட்ட வேலைகளும் தற்போது நடைபெற்று வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ