Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிக்கும் 'ராயன்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

-

தனுஷ் நடிக்கும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் நடிக்கும் 'ராயன்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு ராயன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை தனுஷே இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் தனுஷ் தவிர காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சரவணன், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதே சமயம் ராயன் பட குழுவினர் படமானது ஜூன் மாதத்தில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி நேரு அரங்கத்தில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது. தனுஷ் நடிக்கும் 'ராயன்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?மேலும் இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷின் முந்தைய பட இயக்குனர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ