Homeசெய்திகள்சினிமா'கங்குவா 2' படத்தின் ஷூட்டிங் எப்போது? ரிலீஸ் எப்போது?

‘கங்குவா 2’ படத்தின் ஷூட்டிங் எப்போது? ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -
kadalkanni

இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் 'கங்குவா'?.... திரை விமர்சனம் இதோ!மேலும் இவர்களுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பல மொழிகளில் வெளியான இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது நிகழ்காலத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்திலும் கடந்த காலத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இந்த படத்தின் விஷுவல்ஸ் மிரட்டலாக அமைந்திருக்கிறது. இருப்பினும் திரைக்கதையில் சிறுத்தை சிவா கொஞ்சம் சொதப்பி இருக்கிறார். அதே சமயம் சூர்யாவின் நடிப்பும் கேமியா வில்லனாக தோன்றும் பெரிய ஹீரோவின் நடிப்பும் திரையரங்கை அதிர வைக்கிறது. 'கங்குவா 2' படத்தின் ஷூட்டிங் எப்போது? ரிலீஸ் எப்போது?அத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் – இல் கங்குவா 2 படத்திற்கான லீட் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் அடுத்தது கங்குவா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. கங்குவா 2 திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்றும் 2027 ஆம் ஆண்டில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ