spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'SK 25' டைட்டில் டீசர் வந்தாச்சு.... 'SK 23' டைட்டில் டீசர் எப்போது?

‘SK 25’ டைட்டில் டீசர் வந்தாச்சு…. ‘SK 23’ டைட்டில் டீசர் எப்போது?

-

- Advertisement -

SK 23 டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'SK 25' டைட்டில் டீசர் வந்தாச்சு.... 'SK 23' டைட்டில் டீசர் எப்போது?நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 25 வது படமான இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று (ஜனவரி 29) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். 'SK 25' டைட்டில் டீசர் வந்தாச்சு.... 'SK 23' டைட்டில் டீசர் எப்போது?அதன்படி ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகளும் தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கடந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 'SK 25' டைட்டில் டீசர் வந்தாச்சு.... 'SK 23' டைட்டில் டீசர் எப்போது?இந்நிலையில் SK 23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டைட்டில் டீசர் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. அடுத்தது இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ