spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்த அந்த நடிகர் யார்?

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்த அந்த நடிகர் யார்?

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மகனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்த அந்த நடிகர் யார்?

அஜித் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அஜித்தின் 63வது படமான இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசைகளும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இப்படமானது வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்த அந்த நடிகர் யார்? இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், இந்த படமானது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இதில் எமோஷனல் கனெக்ட் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் அஜித், அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களின் மகனாக கார்த்திகேயா தேவ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மகனாக நடித்த அந்த நடிகர் யார்?

we-r-hiring

நடிகர் கார்த்திகேயா தேவ், பிரபாஸின் சலார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ