சைஃப் அலிகான் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தேவரா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஸ்பிரிட் படத்தில் சைஃப் அலிகான் மட்டுமல்லாமல் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான கரீனா கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் நேற்று (ஜனவரி 15) இரவு நேரத்தில் சைஃப் அலிகான் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நிலையில் அவரை சைஃப் அலிகான் பிடிக்க முயன்ற போது அந்த மர்ம நபர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை கரீனா கபூர் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் தனது சகோதரி கரிஷ்மா, சோனம் கபூர், குழந்தைகள் ஆகியோருடன் வெளியில் சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் சிசிடிவி பதிவை கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். அதில் சம்பவம் நடந்த அந்த நேரத்தில் சைஃப் அலிகான் வீட்டிற்கு வெளியில் இருந்து யாரும் செல்லவில்லை எனவும் எனவே வீட்டில் இருந்த யாரோ தான் சைஃப் அலிகானை தாக்கியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -