Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்திற்கு பெண்கள் மத்தியில் எழும் எதிர்ப்பு!

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்திற்கு பெண்கள் மத்தியில் எழும் எதிர்ப்பு!

-

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமது தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ‘இறைவன்’ படத்தை இயக்கியுள்ளார்.
நயன்தாரா இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லி, நரேன் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரமான சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் படத்தின் மூலம் பிரபலமான ராகுல் போஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இறைவன் படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் சைக்கோ கில்லராக அமைந்த ராகுல் போஸ் இளம் பெண்களை கடத்திச் சென்று மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்கிறார். அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களை சித்தரவதை செய்து கொலை செய்வதை வீடியோ எடுத்து அவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி அவர்களை தற்கொலை செய்ய வைப்பது என காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

இயக்குனர் அகமது இந்தப படத்தை மற்ற சைக்கோ கில்லர் படத்தில் இருந்து வேறுபடுத்தி காட்ட சில புதுவித காட்சிகளை புகுத்தியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடுத்தர வயது பெண் வில்லனை பார்த்து பயப்படுவார், அதற்கு அவர் என்னை பார்த்து இளம் பெண்கள் தான் பயப்பட வேண்டும் நீ இல்லை என நக்கலாக கூறுவார். அதே சமயம் தன்னை பார்த்து பயப்படாத பெண்களிடம் மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்ளுதல் என விசித்திரமான காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்.

படத்திற்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை தியேட்டரில் திரையிட சென்சார் குழுவினர் எப்படி அனுமதி அளித்தார்கள் என்ற கேள்வியே எழுகிறது.

பொதுவாக சைக்கோ சீரியல் கில்லர் பாணியில் உருவாகும் படங்கள் அனைத்தும் பெண்களை மூலமாக வைத்தே எடுக்கப்பட்டு வருகின்றது. ராட்சசன், சைக்கோ, போர்த்தொழில் என சைக்கோ திரில்லர் பாணியில் வெளியாகும் அனைத்து படங்களிலும் பெண்களே கொலைக்கு ஆளாக்கப்படுவதே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில் வெளியான இந்த படங்களும் அவற்றை உண்மைப்படுத்துவது போலவே இருக்கின்றன.

நேற்று வெளியான இறைவன் திரைப்படமும் இதையே மையக்கருத்தாக கொண்டு கதையை நகர்த்துகிறது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த மாதிரியான சைக்கோ கில்லர் திரைப்படங்கள் பார்க்க விறுவிறுப்பாக இருந்தாலும், பெண்களை குறை கூறுவது போல் இருக்கிறது என பல விமர்சனங்கள் எழுகின்றன. இந்த படத்தின் டைட்டில் இறைவன், இப்படிப்பட்ட புனிதமான இறைவன் என்ற பெயரை தலைப்பாக வைத்துக்கொண்டு இந்த மாதிரியான செயல்களை செய்வது புனிதமா? என்ற கேள்விதான் எழுகிறது.” என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

MUST READ