யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை முகத்தான்‘ படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யோகி பாபு தற்போது மலையாள இயக்குநர் ரஜிஷா மிதிலா இயக்கத்தில் ‘யானை முகத்தான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் திலக், ஊர்வசி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.


இந்தப் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளை, சமந்தா நடித்துள்ள சாகுந்தலம், அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள மித்ரன், விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் உட்பட 7 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு யானை முகத்தான் படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

“எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஒரு வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். வரும் 21ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகும்” என்று படக்குழு அறிவித்துள்ளது.


