spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலகத்திலேயே சிறந்த அம்மா நீ தான்... நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!

உலகத்திலேயே சிறந்த அம்மா நீ தான்… நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!

-

- Advertisement -

இந்த உலகத்தோட சிறந்த அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான் தற்போது கோலிவுட்டின் ஸ்டார் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்து இந்த ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

we-r-hiring

சில மாதங்களுக்கு முன்பு வாடகைத்தாய் முறை மூலம் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டனர். அதில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்தன. உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக் தைவிக் என் சிவன் குழந்தைளுக்கு பெயர் வைத்துள்ளனர்.

 

குழந்தைகளை இருவரும் கண் போல பாதுகாத்து வருகின்றனர.  குழந்தைகள் மீது நயன்தாரா மிகவும் பாசமாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்.

இதுவரை குழந்தைகளின் முகத்தை கூட இருவரும் காட்டாமல் பாதுகாத்து  வருகின்றனர். உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாரா தனது குழந்தைகளை கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் உலகத்தின் சிறந்த அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ