spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி; கள்ளக்காதலனும் சேர்ந்து சிக்கியது எப்படி? பரபரப்பு பின்னணி 

கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி; கள்ளக்காதலனும் சேர்ந்து சிக்கியது எப்படி? பரபரப்பு பின்னணி 

-

- Advertisement -

கொளத்தூரில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சென்னை கொளத்தூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் 45. இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருந்தார். இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் நிஷாலினி 17 விமல் ராஜ் 15. என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சித்ரா ஏற்கனவே திருமணமாகி முதல் கணவருடன் விவாகரத்து பெற்று தற்போது இரண்டாவது கணவரான ராஜசேகர் உடன் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி அன்று காலை முதலே ராஜசேகர் வீட்டில் குடித்துவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை 7 மணி அளவில் முழு குடிபோதையில் வீட்டில் படுத்து இருந்த ராஜசேகரை அவரது மனைவி எழுப்பி உள்ளார். அப்போது மூச்சுப் பேச்சின்றி இருந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது மனைவி சித்ரா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளார். உடனே மருத்துவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் பேரில் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது மருத்துவர்கள் ராஜசேகரை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. ராஜமங்கலம் போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று ராஜசேகரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது உடற்கூராய்வு செய்ததில் உயிரிழந்த ராஜசேகர் கழுத்தில் காயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முழு பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜசேகர் உயிரிழந்தது எப்படி என தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை யடுத்து பிரேத பரிசோதனை செய்த ராஜசேகரன் உடலை அவரது தந்தையிடம் ஒப்படைத்த ராஜமங்கலம் போலீசார்,தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜசேகரின் உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் உயிரிழந்த ராஜசேகரன் பிரேத பரிசோதனை குறித்த விவரங்கள் நேற்று ராஜமங்கலம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் ராஜசேகரின் கழுத்தில் எலும்பு உடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் இயற்கையான மரணம் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து ராஜசேகரின் மனைவி சித்ராவை நேற்று காலை கைது செய்த ராஜமங்கலம் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் ராஜசேகர் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ராஜசேகர் ஒட்டி வந்த லாரியின் உரிமையாளரான செங்குன்றம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (39) என்பவர் வீட்டிற்கு வந்து போனது தெரிய வந்தது. அவரையும் போலீசார் நேற்று காலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.இதில் ராஜசேகர் தீபாவளி அன்று காலை முதலே குடிபோதையில் தனது மனைவி சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ராஜசேகர் கடந்த ஐந்து வருடங்களாக லாரி ஓட்டி வந்துள்ளார் அவரது முதலாளியான தனசேகர் என்பவர் அடிக்கடி ராஜசேகர் வீட்டிற்கு வந்து செல்லும்போது சித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது.

இதுகுறித்து பலமுறை சித்ராவை ராஜசேகர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் சித்ரா தனசேகர் உடனான தொடர்பை தொடர்ந்து வந்ததால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் ராஜசேகர் சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதற்குள் சித்ரா தனசேகருக்கு போன் போட்டு வர சொல்லி உள்ளார். ஆனால் அதற்குள் வெளியே சென்ற சித்ராவின் கணவர் ராஜசேகர் வீட்டிற்கு வந்து சித்ராவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது சித்ராவின் கள்ளக்காதலன் தனசேகர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சித்ரா மற்றும் தனசேகர் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜசேகர் கூச்சலிடாமல் இருக்க அவரது வாயை பொத்தி கழுத்தை இறுக்கி உள்ளனர். இதில் தனசேகர் உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தனசேகர் மற்றும் சித்ரா தனது கணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அப்போது தனசேகரும் உடன் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை யடுத்து லாரி டிரைவர் ராஜசேகர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது மனைவி சித்ரா மற்றும் தனசேகர் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ