கவின் என்ற ஐ டி நிறுவன ஊழியா் நெல்லையை சேர்ந்த சுர்ஜித் ஆய்வாளர்களின் மகன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவா் கவின். இவரது தந்தை விவசாயி, தாய் அரசுப் பள்ளி ஆசிாியா். கவின் சென்னையில் ஐ டி நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா். என் எ சி நகரில் உள்ள மருத்துவமனைக்கு தாத்தாவை சிகிச்சை அழைத்து சென்றுள்ளாா். அங்கு இவா் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை சம்பவம் தொடா்பாக 22 வயதே ஆன சுர்ஜித் என்ற இளைஞா் காவல் துறையில் சரண் அடைந்தாா். அவா் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் சுா்ஜித் உதவி ஆய்வாளர்களாக பணி ஆற்றக் கூடிய பெற்றோர்கள் சரவணாகுமார், கிருஷ்ணவேணி இவர்களின் தூண்டுதலின் பெயரில் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக கவினுடைய பெற்றோர் அவருடைய தாய் செல்வி பாளைங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜாதி பாகுபாடு காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக இந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாளைங்கோட்டை உதவி ஆணையாளர் இந்த சம்பவத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய உதவி ஆய்வாளர்களே தங்களது மகன் மூலமாக இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றினார்கள்.
இது தொடர்பாக கிருஷ்ணா சாமி ஜோன் பாண்டியன் உள்ளிட்ட அவர்கள் சமூகத்தை சார்ந்த தலைவர்கள் கண்ட அறிக்கை மூலமாகவும் வீடியோக்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். தன்னுடை அக்கா மற்றும் கவின் காதலித்து வந்தனா். அதன் பிறகு எனது அக்கா ஜாதியின் பெயரால் காதலிக்க மறுத்த பிறகும் கட்டாயப்படுத்தியதாக சுர்ஜித் என்ற இளைஞர் கூறியிருக்கக் கூடிய நிலையில், அது தொடர்பாக முன்கூட்டிய 6 மாதமாக காதலிக்க மறுத்த நிலையிலும் தொடர்ந்து அவர் டார்ச்சர் செய்து வந்தார் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர். அதனால் தான் அவரை கொலை செய்தேன்.
இந்த நிலையில் உதவி ஆய்வாளர்களாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவர்கள் இந்த கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைக்கு துணைபோனார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துருகிறது.
பார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி! சம்பவம் செய்யும் ராகுல்!