spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!

மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!

-

- Advertisement -

மாணவியை  அவதூறாக யூடியூபில்  கமெண்ட் செய்த நெல்லை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!நெல்லை பழையபேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு அஸ்வதி என்ற மாணவி முதலாமாண்டு படித்து வருகிறார். இங்குள்ள பேராசிரியர் சுமிதா தன்னை திட்டுவதாக கல்லூரி முதல்வரிடம் மாணவி புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படும் நிலையில் மாணவி இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார்.

அப்பொழுது மாணவியிடம் youtube சேனலில் ஒருவர் இன்டர்வியூ எடுத்து அதை பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோவில் கல்லூரியில் பணியாற்றும் விலங்கியல் துறை பேராசிரியர் சுமிதாவின் கணவர் துரைராஜ், என்பவர் தரை குறைவான வார்த்தைகளில் கமெண்ட் செய்திருக்கிறார். மாணவி இது குறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது சைபர் கிரைம் காவல்துறையினர் ராணி அண்ணா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் சுமிதா, அவரது கணவர் துரைராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கூடுதல் வரியால் அமெரிக்காவின் கருவூலம் நிரம்பி வருகிறது – டிரம்ப் பெருமை

we-r-hiring

MUST READ