Homeசெய்திகள்மாவட்டம்கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் முதல்வர் விஜய்: பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மேயர்...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் முதல்வர் விஜய்: பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மேயர் கவிதா!

-

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்

we-r-hiring

இன்று மதியம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, முதலமைச்சர் விஜய்க்குப் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் முறைப்படி வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய அரசு விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்குகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு நேரிட்ட துரதிர்ஷ்டவசமான கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார். மேலும், கிருஷ்ணராயபுரம் அருகே அமையவுள்ள புதிய தொழிற்சாலை திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

முதலமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரப் பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

MUST READ