HomeBreaking Newsஅரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான...

அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

-

- Advertisement -

அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பார்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி ஐஏஎஸ் தனது 2 வயது மகனை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். அவரது இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.​அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

​ஆய்வில் கிடைத்த திருப்தி
​கடந்த மாதம் 1-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகப் பொறுப்பேற்ற சரண்யா அறி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், எசனை ஊராட்சியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் அவர் திடீர் ஆய்வு நடத்தினார். ​அப்போது, அங்கிருந்த உள்கட்டமைப்பு வசதிகள், குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் முறைகள் மற்றும் அங்கன்வாடி மையத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடு ஆகியவை கலெக்டரை வெகுவாகக் கவர்ந்தன. மையத்தின் தரத்தைப் பாராட்டிய அவர், “எனது குழந்தையையும் இதேபோல் அரசு அங்கன்வாடியில்தான் சேர்ப்பேன்” என அங்கிருந்த ஊழியர்களிடம் உறுதியளித்தார்.

we-r-hiring

அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

​வாக்குறுதியை நிறைவேற்றிய கலெக்டர்
​தான் கொடுத்த வாக்கின்படி, நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில், தனது 2 வயது மகனான ஆத்விக்கை கலெக்டர் சரண்யா அறி சேர்த்துள்ளார். ​இந்நிலையில், நேற்று பணி நிமித்தமாக விளாமுத்தூர் பகுதிக்குச் சென்ற கலெக்டர், தற்செயலாகத் தனது மகன் படிக்கும் அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்தார். அங்கு மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த தனது மகனைக் கண்டு மகிழ்ந்த அவர், குழந்தையின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து அங்கன்வாடி ஊழியர்களிடம் அன்போடு கேட்டறிந்தார். கலெக்டர் தனது மகனைப் பார்க்க வந்த இந்த எளிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

​சமூக மாற்றத்திற்கான அடித்தளம்
​தற்காலத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை அதிகரித்து வரும் நிலையிலும், மறுபுறம் அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது. “அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு நிறுவனங்களில் சேர்த்தால் மட்டுமே, அங்குள்ள உணவின் தரம் உயரும்; கல்வியும் மேம்படும்” எனச் சமூக ஆர்வலர்கள் நீண்டநாட்களாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ​ஆனால், நடைமுறையில் மிகச் சில அரசு ஊழியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இத்தகைய சூழலில், மாவட்டத்தின் முதல் குடிமகனாக இருக்கும் கலெக்டரே தனது மகனை அங்கன்வாடியில் சேர்த்திருப்பது, அரசு அமைப்புகளின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நிச்சயம் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் முதல்வர் விஜய்: பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மேயர் கவிதா!

MUST READ