HomeBreaking News70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

-

- Advertisement -

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் தாராளமாகத் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் அஸ்வின். இவரது பெற்றோர்கள் தங்களது வீட்டை இவருக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். சொத்து கைக்கு வந்தவுடன், பெற்றோர் என்றும் பாராமல் அவர்களை வீட்டை விட்டே அஸ்வின் வெளியேற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் முதியோர் நல தீர்ப்பாயத்தை (Tribunal) நாடினர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், “வீட்டை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொழிலதிபர் அஸ்வின் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்ததோடு, “பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமையில்லை” என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் டிசம்பரில் வங்கதேசம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா!

MUST READ