Homeசெய்திகள்இந்தியாபேரனுக்காக பூரி சுட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

பேரனுக்காக பூரி சுட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

-

- Advertisement -

பரபரப்பான அரசியல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகளுக்கு மத்தியிலும், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் ஆசையை நிறைவேற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

முதல்வர் ரேவந்த் ரெட்டி

we-r-hiring

தெலங்கானா முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே எப்போதும் மக்கள் பணிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் என பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்து வருகிறார் ரேவந்த் ரெட்டி. இந்நிலையில், குடும்பத்தினருடன் அவர் செலவிட்ட சில இனிமையான தருணங்களின் வீடியோ ஒன்றை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேரன், “தாத்தா… நீங்கள் பூரி சுட்டுக் கொடுத்தால் தான் நான் சாப்பிடுவேன்” என்று அடம் பிடித்துள்ளார். பேரனின் மழலை மாறாத ஆசையைத் தட்ட முடியாமல், முதல்வர் ரேவந்த் ரெட்டி உடனே சமையலறைக்குச் சென்றுள்ளார்.

அங்கு பூரி மாவை உருட்டி, எண்ணெயில் போட்டு, பேரன் ரசித்துப் பார்க்கும் வகையில் சுடச்சுட பூரி சுட்டுக் கொடுத்து அசத்தியுள்ளார். தாத்தா பூரி சுடுவதை அவரது பேரன் அருகில் நின்று புன்னகையுடன் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பதிவில், “’தாத்தா நீங்கள் பூரி சுட்டால் தான் சாப்பிடுவேன்’ என்று பேரன் கேட்டால் மறுக்க முடியுமா? பரபரப்பான அரசியல் வாழ்க்கைக்கு இடையே, பேரன் கேட்டவுடன் பூரி மாவை எடுத்து, அவனது அழகான புன்னகையுடன் பூரி சுட்டுக் கொடுத்துக் கழித்த சில இனிமையான தருணங்கள் இவை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக இருந்தாலும், வீட்டிற்குள் நுழைந்ததும் அவரும் ஒரு பாசமுள்ள தாத்தா தான் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போது இணையவாசிகள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

MUST READ