Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் 'சாக்லேட் மால்ட்' ஹெல்த் மிக்ஸ் வழங்கும் திட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் ‘சாக்லேட் மால்ட்’ ஹெல்த் மிக்ஸ் வழங்கும் திட்டம்!

-

- Advertisement -

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், இனி காலை நேரத்தில் பாலுடன் ‘சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்’ கலந்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காகச் சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையுடன் புதுவை அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரி

காலை சிற்றுண்டி திட்டம்:
புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ‘ராஜீவ்காந்தி காலை சிற்றுண்டி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், எல்.கே.ஜி (LKG) முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் 100 மில்லி சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

கூடுதல் ஊட்டச்சத்து:
மாணவர்களுக்குத் தற்பொழுது வழங்கப்படும் பாலுடன், கூடுதல் ஊட்டச்சத்தை அளிக்கும் வகையில் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் பொடியைக் கலந்து வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கல்வித்துறைச் செயலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசின் கல்வித்துறைச் செயலர் கிருஷ்ண மோகன் உப்பு மற்றும் சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையின் அறங்காவலர் சந்தோஷ் அல்லத் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரஸ்பரம் கையெழுத்திட்டனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ