Homeசெய்திகள்க்ரைம்9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ...

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2022-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர், அச்சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நீதிபதி வினோதா இன்று முக்கிய தீர்ப்பை வழங்கினார். ​அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹20,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் ₹2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!

we-r-hiring

MUST READ