spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி!  சம்பவம் செய்யும் ராகுல்!

பார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி!  சம்பவம் செய்யும் ராகுல்!

-

- Advertisement -

பஹல்காம் தாக்குல் குறித்த விவாதத்தை பாஜக நேர்மையாக நடத்தாது என்பதால் தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கான நோக்கம் குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்றம் கூடிய உடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். அடுத்து தமிழ்நாட்டில் சோழர் விழாவில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அவருடைய சுற்றுப்பயண திட்டத்தில் தான் நாடாளுமன்றம் இடம்பெற்றுள்ளது. இந்த சுற்றுபயணமும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் காரணமாக கேள்விக்குள்ளாகி உள்ளது. பிரதமரின் பொன் முகத்தை காண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வி நெடுநாட்களாக இருந்து வருகிறது. அதற்கு  டிரம்ப் உரிமை கோரிக்கொண்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு சொல்கிறது. நாட்டு மக்களுக்கு என்ன நடைபெற்றுள்ளது என்று யாருக்கும் தெரியவில்லை. தொடர்ச்சியாக டிரம்ப் சொல்லி தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது என்கிற செய்தி உள்ளது. உண்மையை உலகுக்கு சொல்லுங்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

பாதுகாப்புத்துறை அளித்த செய்திகள், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பியது வரை இந்த நிகழ்வுகள் உண்மையை வெளிக்கொண்டு வர வில்லை. கார்கில் போர் நடைபெற்றபோதும், நடைபெற்று முடிந்த பிறகும் வெளிப்படைத்தன்மை என்பது இருந்தது. பாகிஸதான் அரசு கேட்டுக்கொண்டதால் தான் இந்தியா போர் நிறுத்தம் அறிவித்ததாக மத்திய அரசு சொல்கிறது. அதற்கு என்ன ஆதாரத்தை வெளியிட்டார்கள். எல்லைக்குள் இனி வரமாட்டோம் என்று பாகிஸ்தான் உடன் ஒப்பந்தம் போட்டார்களா? பாகிஸ்தான் அரசு, மத்திய அரசிடம் பேசியதற்கான அறிகுறி என்பது மத்திய அரசின் அறிவிப்புதான். அப்போது இதில் ஒரு வெளிப்படைத் தன்மை இல்லை. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றுதான் இவ்வளவு நாட்களாக எதிர்க்கட்சிகள் காத்திருந்தன. ஆனால் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்று இன்றைக்கு நாட்டு மக்கள் பார்க்கப் போகிறார்கள். வழக்கம்போல பொய்கள் தானா? அல்லது ஆக்கப்பூர்வமான விவாதமா என்று நாடாளுமன்றம் இன்றைக்கு காண காத்திருக்கிறது.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிகார் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரங்களை விட்டுவிடுவோம் பட்ஜெட், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய புதிய திட்டங்கள், புதிய மசோதாக்கள் போன்ற எதிலாவது எதிர்க்கட்சிகளின் கவலைகள் என்ன என்று கேட்கிற பக்குவம் மத்திய அரசுக்கு இருந்துள்ளதா? கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் மிருக பலத்துடன் ஆட்சியில் பாஜக இருந்தது. முழுமையான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற ஒரு கட்சி இல்லை. அதனால் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால் தற்போது எதிர்க்கட்சி, அதற்குரிய பலத்தோடு வந்துள்ளது. பாஜக மைனாரிட்டி அரசைதான் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கூட எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குவது எப்படி ஒரு மரபாகும். அப்போது எதிர்க்கட்சிகள் சண்டமாருதம் செய்வது தானே அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

ஒரு அரசு வெளிப்படைத் தன்மையோடு இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு சாட்சிகள் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பகிரப்படுகின்றன. நீங்கள் பகல்காம், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தை 16 மணி நேரம் மிகவும் நேர்மையாக நடத்துவீர்களா? அதற்கு எதாவது  உத்தரவாதம் உள்ளதா? விவாதத்திற்கு மத்திய அரசு தயார் என்றால் ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டியதுதானே. இது இந்த நாட்டையே புரட்டிப்போட்ட விஷயம் தானே. பகல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்ணுக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள். வெற்றுக் கூச்சல்கள் இங்கே தேவையில்லை. 16 மணி நேர விவாதத்திற்கு முதலில் எதிர்க்கட்சிகளை ஏன் தயார்படுத்தவில்லை என்பதுதான் கேள்வி. இந்த விவகாரத்தை நீங்கள் விவாதத்திற்கு வைக்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள். அதனால் தான் 2 நாட்கள் விவாதம் நடைபெறும் என்று சொல்லியுள்ளீர்கள். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார்கள். அதற்கு உங்களது நடவடிக்கைகள் தான் காரணம். பிகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நிச்சயமாக நல்ல தீர்ப்பை கொடுக்கும் என்று நம்புகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ